Monday 8 August 2022

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு..!!!

SHARE


லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், 12.5 கிலோ.கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்று 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 5 கிலோ.கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் 99 ரூபாவாலும், 2.3 கிலோ.கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த புதிய விலைக் குறைப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலண்டரின் விலை இன்று முதல் முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின்விலை 246 ரூபாவினாலும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 99 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயுவின் விலை இனி மாதாந்தம் எரிவாயு சூத்திரத்திற்கமைய திருத்தம் செய்யப்படும். எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக இல்லாதொழிப்போம் என நாட்டுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்முதித பீரிஸ் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

லிட்ரோ நிறுவனம் மக்களின் தரப்பில் இருந்து செயற்படும்.எரிவாயு விநியோக கட்டமைப்பில் காணப்பட்ட சவால்களை சிறந்த முறையில் வெற்றிக்கொண்டுள்ளோம்.உலக சந்தையின் விலைக்கமைய எரிவாயுவின் விலையை குறைத்து நுகர்வோருக்கு அதன் பயனை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.நுகர்வோர் அதிகார சபை,நிதியமைச்சு ஆகியவற்றுடன் ஒன்றினைந்து எரிவாயுவிற்கான விசேட விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 246 ரூபாவினாலும்,5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 99 ரூபாவினாலும்,2.3 எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படும்.அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4664 ரூபாவாகவும்,5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1872 ரூபாவாகவும்,2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 867 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவின் விலை இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல்வாரத்தில் திருத்தம் செய்யப்படும்.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் போது திறைச்சேரியின் ஊடாகவும்,நிறுவனத்தின் ஊடாகவும் அதனை முகாமைத்துவம் செய்யவும்,விலை குறைவடையும் போது அதன் பயனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்திற்கு தேவையான எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு தற்போதே விலைமனுகோரல் வெளியிடப்பட்டுள்ளது.எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக இல்லாதொழிப்போம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
SHARE