அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சில அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு உட்பட்டவர்களே வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அரச ஊழியர்களுக்கு 05 வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news