சனி வக்ர நிவர்த்தி! இந்த 3 ராசியையும் குறி வைத்து தாக்கும் சனி பகவான் - தப்பிக்க ஒரே வழி இது தான்..!!!


வக்ர சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.

மகர ராசியில் வக்ரமாக இருக்கும் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகரத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

சனி பகவான் தற்போது மகர ராசியில் வக்ர நிலையில் உள்ளார். இதனால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை சனி நடக்கும்.

மறுபுறம் அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனியின் தாக்கம் கடகம் மற்றும் விருச்சிக ராசியில் இருக்கும். பொதுவாக சனி வக்ரமாக இருக்கும் காலம் வேதனை நிறைந்ததாக இருக்கும்.

சனி வக்ர நிவர்த்திக்கு பின் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்!

கன்னி

சனி வக்ர நிவர்த்தியாவதால் கன்னி ராசிக்காரர்கள் அதிக தொல்லைகளை சந்திக்க நேரிடும். கன்னி ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் சற்று கடினமாக இருக்கும். அதோடு வேலை செய்பவர்கள் இக்காலத்தில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

தனுசு

சனி வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்காரர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் அதிக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

கடகம்

சனி வக்ர நிவர்த்தியடைவதால் கடக ராசிக்காரர்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் திருமணமானவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

இது மட்டுமின்றி, சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சனி பகவானின் தாக்கத்தைக் குறைக்கும் பரிகாரங்கள்

தினமும் சனி சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.

சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு, கருப்பு உளுந்து, கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம்.

சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் சனி பகவானை நினைத்து கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

அனுமனை தினமும் வணங்குங்கள்.

சனிக்கிழமை அன்று சனி பகவான் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
Previous Post Next Post


Put your ad code here