ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய திட்டம்! வெளியானது அறிவிப்பு..!!!




சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சிறுவர்களுக்கு விமான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், நாட்டின் பிள்ளைகளின் சுகாதார நலைனை மேம்படுத்தி உரிய முக்கியத்துவத்தினை வழங்கிட “ஸ்ரீ லங்கன் கெயார்ஸ்” தயாராகவுள்ளது.நம் நாட்டு பிள்ளைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான சிகிச்சைகளுக்காக பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல நேரிடுவதுடன் அதற்கு பெருமளவிலான பணமும் செலவிட நேரிடும்.

இதனால் பெற்றோர் சிரமத்திற்கு உள்ளாவதையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகவே அதற்கான உதவிகளை செய்வதற்கு “ஸ்ரீ லங்கன் கெயார்ஸ்” முன்வந்துள்ளது.பிள்ளைகளின் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதற்குரிய விமான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் பிள்ளையுடன் செல்லும் பாதுகாவலருக்கும் விமான அனுமதிப் பத்திரத்தை பெற்றுத்தரவுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதற்கான தொலைப்பேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிகிச்சை தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு 019 - 7332942 ( திருமதி லிஹினி மீகல்ல) என்ற இலக்கத்தினை தொடர்புகொள்ளுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here