யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்..!!!




யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள நான்கு வீடுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு ஆலய வீதியில் மின் குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

அவற்றினை நேற்று முன்தினம் புதன்கிழமை வீதியால் சென்ற இருவர் போதையில் மின் குமிழ்களை அடித்து உடைத்துள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வேளை மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று ஆலயத்திற்கு அருகில் இருந்த நான்கு வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here