Wednesday 28 September 2022

உடலின் இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்யுமா பீட்ரூட் ஜூஸ்..!!!

SHARE



ஒவ்வொரு காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. இதில் உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் காய்கறி எது என்று கேட்டால் அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அதிலும் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும்.பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும்.

அத்தகைய டாக்ஸின்களை பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் வெளியேற்றச் செய்யும். உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
SHARE