கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை மீட்ட சாவகச்சேரி பொலிஸார்..!!!


கற்களுக்குள் புதைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனம் ஒன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கற்களை ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை பொலிஸார் வழிமறித்து சோதனை நடாத்தினார்கள்.

அதன் போது டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகளை ஏற்றி அதன் மீது கற்களை ஏற்றி மரக்குற்றிகளை மறைத்து கடத்தி செல்லப்படுவதனை பொலிஸார் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர். மீட்கப்பட்டுள்ள மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் எனவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.







Previous Post Next Post


Put your ad code here