அக்டோபர் மாதத்தில் சனி பெயர்ச்சி! ராஜயோகத்தை தட்டிச் செல்லும் 3 ராசிகள்..!!!


சனி பெயர்ச்சியால் குறிப்பிட்ட இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பமாகும், அவை எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

நீதியின் கடவுளான சனி பகவான் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும். சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறார்.

சனி பகவான் தீபாவளி முதல் மகர ராசிக்கு செல்ல இருக்கிறார். அவரின் இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியின் 10ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்க போகிறார். இந்த வீடு மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வேலைகளின் வீடாகக் கருதப்படும். இந்த நேரத்தில் உங்கள் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

நீங்கள் பங்குச் சந்தை, வணிகம் மற்றும் லாட்டரி போன்றவற்றில் முதலீடுசெய்யலாம். தொழிலில் புதிய வேளை வாய்ப்பினை பெறலாம். பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு

சனி இந்த ராசியின் இரண்டாவது வீட்டிற்குள் நுழைவார். இந்த நேரத்தில் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயம் பெறலாம். இது தவிர, இந்த காலகட்டத்தில் சிக்கிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

நிதி நிலையும் வலுவாக இருக்கும்.வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். தொழிலில் வெற்றி வாய்ப்புகள் உண்டு. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

மீனம்

சனிப்பெயர்ச்சி உங்களுக்குநிறைவான செல்வத்தைத் தரும். சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் 11ம் இடத்தில் இருக்கிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது.

இந்த நேரத்தில் நீங்கள் புதிய வருமான ஆதாரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதனால் எதிர்காலத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழிலில் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
Previous Post Next Post


Put your ad code here