பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்..!!!




செவ்வாய் தனது பகை வீடான மிதுன ராசிக்கு 2022 அக்டோபர் 16 அன்று ரிஷப ராசியிலிருந்து பெயர்ச்சி ஆகிறார். அவர் அக்டோபர் 30-ம் திகதி வரை மிதுன ராசியில் சஞ்சரித்து, பின்னர் வக்ர பெயர்ச்சி எனும் பின்னோக்கி நகர உள்ளார்.

செவ்வாய் தரும் பொதுபலன்

எதிரி வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்தால் இந்த உலகிற்கு சில மோசமான விளைவுகள் ஏற்படலாம். இயற்கை சீற்றம் மற்றும் பெரும் அதே சமயம் செவ்வாயின் இந்த கோச்சார பலனால் சில ரசியினருக்கு சுபமங்கள பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். காதல், உறவுகளில் இனிமையான விஷயங்கள் நடக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம் : மேஷ ராசிக்கு 3ம் வீடான தைரிய ஸ்தானத்தில் ராசி அதிபதி செவ்வாயின் சஞ்சாரம் செய்வதால் உங்களின் ஆற்றலும், நம்பிக்கையையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துறை ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் பணியை மூத்த அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இருப்பினும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதோடு, வார்த்தைகளை கவனித்து பயன்படுத்தவும்.

சமூகத்தில் உங்கள் ஆதிக்கமும், மரியாதையும் அதிகரிக்கலாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு ஆதரவாளர்கள் அதிகரிக்கலாம். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலமாகவும் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம் : சிம்ம ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நிகழ்கிறது. இந்த அமைப்பு வியாபாரிகளுக்கு சிறப்பானதாக இருக்கும், தடைபட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கலாம், அவற்றிலிருந்து பலன்களையும் பெறலாம்.

கடந்த காலத்தில் செய்த முதலீடுகளிலிருந்தும் பலன்களைப் பெறலாம். சிலருக்கு இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியின் போது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவால் நீங்கள் ஆதாயமடைவீர்கள். வேலை மாற திட்டமிட்டிருந்தால், செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரத்தின் போது, உங்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கன்னி : கன்னி ராசிக்கு 10ம் வீடான கர்ம ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நடக்கிறது. இதனால் தொழில் தொடர்பான பல கவலைகளில் இருந்து விடுதலை பெறலாம். வேலையில்லாதவர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம். புதிய தொழிலைத் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

இருப்பினும், சிலருடன் சேர்ந்து கூட்டு தொழில் செய்வதில் கவனம் தேவை. அப்படிப்பட்ட தொழில் தொடங்குவதற்கு முன், நீங்கள் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் பெற்றோருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும், அதிக காரமான உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

மகரம் : மகர ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நடப்பதால் உங்களின் கடினமான வேலைகளை செய்து முடிக்க முடியும். எதிரிகளின் தொல்லை குறையும். உங்களின் போட்டித் திறன் அதிகரிப்பதைக் காணலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறலாம்.

நிலம் வாங்குவது, வீடு கட்டுவது தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் சாதக பலன் கிடைக்கும். திருமணமானவர்கள் உங்கள் துணையின் உறவினர்களுடன் கவனமாக உரையாடவும். சிலருக்கு வேலையில் நல்ல ஓய்வு கிடைக்கும்.

மீனம் : சில மீன ராசியினருக்கு சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும். சமூக மட்டத்தில் உங்களின் புகழ் உயரும், அதே நேரத்தில் சமூகத்தின் முக்கியஸ்தர்களுடன் பழக்கம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள், தொழிலதிபர்களுக்கு பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் தடைபட்ட பணிகளை செய்து முடிக்க முடியும்.

உங்கள் உடல்நிலையும் நன்றாக இருக்கும், ஆனால் தாயின் உடல்நிலையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் அன்பும், காதலும் மிகுதியாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் துணையிடமிருந்து ஆச்சரியமான பரிசைப் பெறலாம்.


Put your ad code here

Previous Post Next Post