
புத்தளம் - ஹசலக்க உல்பதகம பிரதேசத்தில் நேற்று(10) 1 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
ஹசலக்க, உல்பதகம பிரதேசத்தில் உள்ள கால்வாயில் விழுந்து ஒரு வயது 3 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் குழந்தை தனது வீட்டிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனது மூத்த சகோதரருடன் விளையாடிவிட்டு அருகில் உள்ள கால்வாய்க்கு அருகில் சென்றபோது தவறி விழுந்துள்ளார்.
பின்னர் பிரதேச மக்கள் சிறுமியை மீட்டு ஹசலக்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news