பிரின்ஸ் டிரெய்லர் வெளியீடு..!!!


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று (அக்டோபர் 9) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட்டது.

இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படமானது சிவகார்த்திகேயனுக்கு முதல் பைலிங்குவல் படம் ஆகும்.

சமீபத்தில் பிரின்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ”பிம்பிளிக்கி பிளாப்பி” மற்றும் ”ஜெசிகா” ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாகத் திரைக்கு வரவுள்ளது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் இன்று (அக்டோபர் 9) வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது பிரின்ஸ் படத்தின் டிரெய்லரை படக்குழு தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பள்ளி வாத்தியாராக நடிக்கிறார். பார்த்தவுடன் மாணவர்கள் பயப்படும் அளவிற்கு சீரிஸான வாத்தியாராக இல்லாமல், தேர்வுகளில் மாணவர்களிடம் புத்தகத்தைக் கொடுத்துப் பார்த்து எழுதச் சொல்லும் அளவிற்கு குறும்புத்தனமான வாத்தியாராக இருக்கிறார்.

படத்தின் கதாநாயகியும் சிவகார்த்திகேயன் பணிபுரியும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்கிறார்.

பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்படும் காதல், இந்த காதலால் ஏற்படும் பிரச்சனைகள், இந்த பிரச்சனைகளை சரிசெய்யும் தருணங்களை வெளிப்படுத்துவதாக டிரெய்லர் அமைந்திருக்கிறது.

என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் சிவகார்த்திகேயன் அவருக்கே உரியப் பாணியில் நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறார்.


Previous Post Next Post


Put your ad code here