மானிப்பாயில் வீடுடைந்து திருடிய குற்றத்தில் இருவர் கைது..!!!



யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 08ஆம் திகதி கட்டுடை பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த ஒரு இலட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடம் இருந்து 7 பவுண் தங்க நகைகளை மீட்டுள்ளதாகவும் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here