
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுவது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து அரசாங்கத் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பசில் ராஜபக்சவுக்கு, பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தகவல்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.வெளிநாட்டில் இருக்கும் பசில் நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
அமைச்சரவையில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
Tags:
sri lanka news