
நகை கடை ஒன்றில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பில் வியாபாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் வாழைச்சேனை சந்தைப் பகுதியில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாங்கேணி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மேற்படி நகை கடையில் இரு தங்க நகைகளை வெவ்வேறாக அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.
அதில் ஒரு நகையை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக கிடைக்கும் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்று மீதியாக செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்திய பின்னர் நகையைக் கையளிக்குமாறு கேட்ட போது வியாபாரி திரும்பிக் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news