Friday 11 November 2022

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று ; 1,700 விமானங்கள் இரத்து..!!!

SHARE

கொவிட் தொற்று அதிகரித்து வருவதால் சீனா முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் தங்கள் பெரும்பாலான விமானங்களை இரத்து செய்துள்ளன.

தென் சீனப் பெருநகரமான குவாங்சோவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 1,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 700க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

சீனாவில் கொவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விமானங்கள் ரத்து, ஊரடங்கு, கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் வெகுஜன சோதனை போன்ற கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

நாட்டின் பூஜ்ஜிய-கொவிட்-19 கொள்கை இருந்தபோதிலும், அதன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 10,535 புதிய உள்நாட்டு தொற்றாரளர்கள் பதிவாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை ஏப்ரல் 29 க்குப் பிறகு ஏற்பட்ட தொற்றாளர்களின் அதிகரிப்பை காட்டுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,67,544 ஆக அதிகரித்துள்ளது.

குவாங்சோவைத் தவிர மற்ற முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷங்காய் மற்றும் சோங்கிங் போன்றவற்றிலும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை சமீபத்தில் மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE