%20(1).webp)
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சார கம்பியில் சிக்கிய மானை மீட்க சென்ற ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
28 வயதான டபிள்யூ.ஆர்.லஹிரு சம்பத் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் வீட்டின் பின்பக்கத்தில் .இருந்த மின்சார வேலியில் சிக்கியிருந்த மானின் சத்தம் கேட்டு அதனை காப்பாற்ற மானின் அருகில் சென்றபோது, அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைகளை எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தனமல்வில பொலிஸார் மேற்கொள்ளப்பட்டனர்.
Tags:
sri lanka news