யாழில் இன்று திருநர் நினைவு தினம்..!!!


யாழில் இன்று திருநர் நினைவு தினம் உலக வன்மத்தினால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் (Voice of edge - விளிம்பின் குரல்) அமைப்பின் ஏற்பாட்டில் அறிமுக நிகழ்வோடு இன்று (18.11.2022) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் நினைவேந்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் திருநர்கள் தம் வாழ்க்கையைக் கூறும்  எங்கள் குரல்கள் உங்கள் காதுகளில் ஒலிக்காதா? எனும் ஆவணப்படமும் நாடக ஆக்கமும் இடம்பெற உள்ளது.

எனவே இந் நிகழ்வில் நண்பர்கள், ஆதரவாளர்கள், ஊடகங்கள், சக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் பங்குபற்றும் படி அமைப்பினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.தர்மினி.


Previous Post Next Post


Put your ad code here