எரிபொருள் விலையில் மாற்றமில்லை - அமைச்சர் காஞ்சன..!!!


விலை குறைப்பை எதிர்பார்த்து விற்பனை முகவர்கள் தமக்குத் தேவையான கொள்வனவுக் கட்டளைகளை (ஆடர்களை ) வழங்காததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானளவு எரிபொருள் கையிருப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here