வலி.வடக்கில் காணி வாங்குபவர்கள் அவதானமாக இருங்கள்..!!!


யாழ்ப்பாணம் வசாவிளான் , ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும் , அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள சில காணிகள் கடந்த 32 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயங்களாக இராணுவ கட்டுப்பாடுகளில் இருந்த நிலையில் தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

அந்நிலையில் குறித்த காணி உரிமையாளர்கள் அவற்றினை அடையாளம் கண்டு அறிக்கைப்படுத்த முதல் , சில குழுக்கள் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமையாளரின் பெயர்களை மாற்றம் செய்தும் , உறுதிகளில் மோசடி செய்தும் , கள்ள உறுதிகள் முடித்து , அக்காணிகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் உறுதி விடயத்தில் அவதனாமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறும் , வாங்க போகும் காணிகள் தொடர்பில் தீர விசாரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகரபூர்வ சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here