புலோலியில் வீடு உடைத்து திருட்டு – நால்வர் கைது – 14 பவுண் தங்க நகைகளும் மீட்பு..!!!


யாழ்ப்பாணம் வடமராட்சி – புலோலியில் ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

புலோலி சாரையடிப் பகுதியில் டிசம்பர் 7ம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றதை சாதகமாக பயன்படுத்தி வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை மற்றும் ரொகக்கப்பணம் என்பன திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக,புதன்கிழமை (14) குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்டவரை, வியாழக்கிழமை(15) நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here