மார்கழி இசைவிழா 2022 எதிர்வரும் டிசம்பர் 27 ஆரம்பம்..!!!


யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

குறித்த நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறும் என யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகத்தில் சனிக்கிழமை(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் குறித்த உற்பத்தியாளர்களினுடைய கண்காட்சியும் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அண்மையில் உள்ள மண்டபத்தில் இதன்பொழுது இடம்பெறவுள்ளது. உள்ளூரிலே காணப்படுகின்ற கலைஞர்களது திறமைகளையும் அவர்களுடைய கலைத்திறனையும் வெளிக்கொணர்வதற்காகவே குறித்த நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ் வணிகர் கழகம் தெரிவித்தது.

குறித்த நிகழ்வுகளில் இலங்கை கலைஞர்கள் மட்டுமின்றி இந்திய கலைஞர்களும் இணைந்து தங்களுடைய கலைத் திறனை வெளிப்படுத்த உள்ளனர். குறித்த நிகழ்விற்கு பொதுமக்களுக்கு எந்த வித கட்டணங்களும் வசூலிக்கப்டப்படாது இலவசமாக பார்வையிட முடியும். மேலும் குறித்த நிகழ்வுகளை யாழிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் ஊடாக மக்கள் நேரலையாக வீட்டில் இருந்தும் காணக்கூடிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Previous Post Next Post


Put your ad code here