உங்கள் ராசிநாதனான புதன் 7 ம் வீட்டில் அமர்ந்து 7 ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கும் காலத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுறுசுறுப்படைவீர்கள். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும்.
தளராத மனமும் போராட்ட குணமும் உடைய மிதுன ராசி அன்பர்களே... கிடைப்பவற்றில் மகிழ்ந்தாலும் நினைத்ததை அடையக் கடுமையாக உழைப்பவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2023 புத்தாண்டு பிறக்கிறது. இதனால் லாபம் அதிகரிக்கும்.
திட்டமிட்டபடிக் காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த தலைகுனிவுதரும் பிரச்னைகள் நீங்கும். சகோதரர்கள் உங்களோடு ஒத்தாசையாக இருப்பார்கள். அவர்களோடு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிச்சயமாகும். இதுவரை வரவு எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாமல் திண்டாடினீர்களே அந்த நிலை மாறும். சிலர் வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
குருபகவான்
உங்கள் ராசிநாதனான புதன் 7 ம் வீட்டில் அமர்ந்து 7 ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கும் காலத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுறுசுறுப்படைவீர்கள். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். சொத்து பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் திருமணம் நல்ல முறையில் நிச்சயமாகும். புதிய ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய வாகன யோகம் வாய்க்கும்.
குரு சஞ்சாரம் சாதகமா?
குருபகவான் ராசிக்கு 10 ம் வீட்டில் தொடர்வதால் பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். பராமரிப்புச் செலவுகள் கூடும். தொடங்கும் செயல்களை ஒருமுறைக்கு இருமுறை மேற்கொள்ள வேண்டிவரும். யாரோடும் தேவையில்லாமல் பகைக்க வேண்டாம். பழைய கடன் பிரச்னைகளால் சின்னச் சின்ன நெருக்கடிகள் வந்து போகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. சமூகவளைத்தலங்களில் கவனமாக இருங்கள்.
23.4.2023 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ம் வீடான மேஷத்தில் அமர்வதால் அமர்வதால் பணவரவு திருப்தியாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத திடீர் பணவரவும் வாய்ப்புண்டு. புதிய வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கு மேல் நல்ல வேலைக் கிடைக்கும். சகோதரர்கள் அன்பாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக்காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் வாரிசு உருவாகும். மகனின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். சொத்துகளை விற்பதன் மூலம் லாபம் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள்.
சனியின் பார்வை இந்த ஆண்டு எப்படி?
இந்த ஆண்டும் சனிபகவான் அஷ்டம சனியாகவே தொடர்கிறார். எனவே அனைத்து விஷயங்களிலும் சிறு கவனம் தேவை. முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி ஆகியன ஏற்பட்ட வண்ணம் இருக்கும். மனம் சஞ்சலமாக இருக்கும். குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை வந்த வண்ணம் இருக்கும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
மார்ச் 29 ம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ம் தேதிவரை சனிபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்தக் காலகட்டம் உங்களுக்கு மிகவும் பொன்னானதாக அமையும். அனைத்து பிரச்சனைகளும் விலகும். ஆனால் சேமிப்புகள் கரையும். பணப்பற்றாக்குறை அடிக்கடி வந்துபோகும் என்றாலும் மனதில் இருந்த வருத்தங்கள் முற்றிலும் நீங்கும்.
ராகு - கேது சஞ்சாரம் சாதகமா?
8.10.2023 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தினரிடம் உங்கள் கருத்துகளை அளவுக்கு மீறித் திணிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். 9.10.2023 முதல் கேது 4-லிலும் ராகு 10-லும் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள். இதனால் தேவையற்ற பயம் வாட்டும். முன்னெச்சரிக்கை என்ற பெயரில் அதிகமாகக் கவலைப் படுவதைத் தவிருங்கள்.
ராகு கேது
வியாபாரம்: கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களால் சின்னச் சின்னத் தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும். எனவே நீங்களே முன்னின்றி அனைத்தையும் செய்யுங்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பாக்கிகளும் வசூலாகும். ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கமிஷன், உணவு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகம்: ஏப்ரல் மாதம் வரை அலுவலகச் சூழலில் தேவையற்ற தொந்தரவுகள் இருக்கும். உங்கள் மீது வீண் பழி விழும். அனைத்தையும் பொறுமையாகக் கையாளுங்கள். குருபகவான் 23.4.23 முதல் 10 ம் இடத்திலிருந்து விலகுவதால் அனைத்தும் நலமாகும். மேலதிகாரிகள் கனிவுடன் நடந்துகொள்வார்கள். சலுகைகளும் கிடைக்கும். ஜூன், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் சம்பள உயர்வு உண்டு.
இந்த ஆண்டின் முற்பகுதியில் சில சிரமங்கள் இருந்தாலும் பிற்பகுதி திருப்புனை தருவதாக அமையும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
Tags:
Rasi Palan