மகரம் ராசிக்கு 2023 எப்படி? 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்..!!!


ராசிக்கு 4-ம் வீடான மேஷத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். அதற்குரிய வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும்.

கொண்ட கருத்தில் உறுதியாக இருந்து காரியம் சாதிக்கும்வரை மனம் தளராமல் பணியாற்றும் மகரராசி அன்பர்களே... கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தீராத பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு வரும் 2023-ம் ஆண்டு எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. இது பலவிதத்திலும் உங்களுக்கு இந்த ஆண்டு அனுகூலமாக அமையும் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. வீட்டில் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். இதுவரை சோர்ந்துபோயிருந்த உங்கள் முகம் மலரும். தோற்றத்தில் பொலிவு கூடும். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் மறையும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களுக்குக் கைமாற்றாகக் கொடுத்துத் திரும்ப வராத பணம் கைக்குவரும். வாழ்க்கைத்துணைவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும்.

புதிய வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புதிய நகை வாங்கும் யோகம் வாய்க்கும். அடகில் இருக்கும் நகையை மீட்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைக் குறைந்த வட்டிக் கடனால் அடைப்பீர்கள்.

ராசிக்கு 4-ம் வீடான மேஷத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். அதற்குரிய வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும்.

மகரத்துக்கு குருபகவான் சாதகமா?

22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீடான மீனத்தில் நிற்பதால் அனைத்துப் பணிகளையும் மிகவும் இலகுவாக முடிப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவும் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சின்னச் சின்ன ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து நீங்கும். மற்றவர்களின் பேச்சைக்கேட்டுப் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

23.4.2023 முதல் குருபகவான் 4-ம் வீடான மேஷத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற டென்ஷன்கள் வரக்கூடும். அனைத்துப் பணிகளிலும் தடை தாமதங்கள் ஏற்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். யாருக்கும் கடன் கொடுக்கவோ கேரண்டி கொடுக்கவோ வேண்டாம்.

ராகு - கேது தரும் பலன்கள்

8.10.2023 வரை ராசிக்கு 10-ம் வீடான துலாமில் கேதுவும், 4-ம் வீடான மேஷத்தில் ராகுவும் நீடிப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் பிடித்தமான சம்பளம் கைக்குவருவதில் சிக்கல்கள் ஏற்படும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடி உண்டாகும். பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. 9.10.2023 முதல் 9-ம் வீடான கன்னிக்கு கேது பெயர்ச்சி அடைவதால் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அதேவேளை ராகு 30 வீட்டில் அமர்வதால் மனதில் இருந்த பயம் விலகும். படபடப்பு நீங்கும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

சனிபகவான் சாதகமா?

ஜன்மச் சனியாக சஞ்சாரம் செய்யும் சனிபகவானால் அவ்வப்போது சின்னச் சின்னப் பிரச்னைகள் தலைத்தூக்கிய வண்ணம் இருக்கும். குடும்பத்துக்குள் சண்டைகள், வாக்குவாதங்கள் வந்து போகும். வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 2 - ம் வீடான கும்பத்தில் சென்று பாதச்சனியாக அமர்வதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் தீரும். என்றாலும் இக்காலக்கட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

வியாபாரம்: பற்று வரவு கணிசமாக உயரும். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். பணியாளர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள். கடையை மாற்றம் செய்ய யோசிப்பீர்கள். குறைந்த லாபம் அதிக விற்பனை என்று இலக்கு வைத்துப் பணியாற்றுவீர்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகம்: அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகவே இருக்கும். ஏப்ரல் மாதத்துக்குப் பின் சக ஊழியர்கள் நெருக்கடிகள் குறையும். மேலதிகாரி சாதகமாவார். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

மொத்தத்தில் 2023-ம் ஆண்டின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சலையும் பணிச்சுமையையும் தந்தாலும், பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தருவதாக அமையும்.
Previous Post Next Post


Put your ad code here