கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல்போன மகனைத்தேடியலைந்த தாயார் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் குறித்த தாயார் உரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.