வீடொன்றில் இருந்து கஞ்சா பொதி மீட்பு..!!!




2 கிலோ கஞ்சாவுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் மற்றும் 573 வது படைகளின் கட்டளை அதிகாரி 573 பிரிக்கேடியர் பிரசன்னா ஆகியோரின் வழிநடத்தலில், இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதி 2 கிலோ மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுகிறது. இதன் போது, குறித்த வீட்டிலிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here