பாடசாலை மாணவர்கள், சிரேஷ்ட பிரஜைகளும் மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 24 ஆம் திகதி இலவசமாக பார்வையிட முடியும் என்று தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துவதற்காக இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் விசேட நிகழ்வு மற்றும் கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 72 வகையான பாலூட்டிகள், 65 வகையான பறவைகள், 31 வகையான ஊர்வன, 89 வகையான மீன்கள் மற்றும் 30 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.
பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் சுதந்திரமாக விலங்குகளின் எண்ணிக்கை 2,500 முதல் 3,000 வரை அமைந்துள்ளன.
Tags:
sri lanka news