யாழ். கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் கடற்படையினரின் பராமரிப்பில்..!!!


யாழ்ப்பாணம், வெற்றிலைக் கேணிக்கு வடக்கே சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் இலங்கைக் கடற்பரப்பில் பயணிகள் கப்பலில் இருந்த 104 மியான்மர் பிரஜைகளை இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மியன்மாரில் இருந்து இந்தோனேசியாவிற்கு இவர்களை ஏற்றிச் செல்லும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (டிச. 17) இலங்கை கடற்பகுதிக்குள் இவர்கள் பயணித்த படகு அத்துமீறி நுழைந்தது.

கடல் கொந்தளிப்பான நிலையில், கடற்படையினர் கடும் முயற்சியை மேற்கொண்டு, இயக்கப்படாத படகில் இருந்து 104 மியான்மார் பிரஜைகளை மீட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு கடற்படையினரால் உணவு வழங்கப்பட்டது.
















Previous Post Next Post


Put your ad code here