சாவகச்சேரியில் வீட்டை உடைத்து கொள்ளையிட முயன்ற ஒருவர் மடக்கிப் பிடிப்பு..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீட்டை உடைத்து திருட முயற்சித்த திருடனை அயலவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சாவகச்சேரி வடக்கு, மண்டுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்களற்ற நேரம், வீட்டின் கதவினை புதன்கிழமை (டிச. 28) உடைத்து திருட முயற்சித்தவேளை சத்தம் கேட்டு அயலவர்கள் கூடி திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்து மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபரை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here