இந்தியாவில் கொத்தாக சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்...!!!




போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கிம்புலாஎலே குணா, லடியா, வெல்லே சுரங்க உள்ளிட்ட 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் நேற்று (19) இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் (NIA) தமிழ்நாட்டு மாநிலத்தில் உள்ள அகதிகள் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சி. குணசேகரன் என்ற குணா என அழைக்கபடும் பிரேம் குமார், பூக்குட்டி கண்ணா என்ற புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெருமாகே சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா, தனுக்க ரோஷன், வெல்லே சுரங்க என்ற சுரங்கா பிரதீப், திலீபல் என்ற திலீபன் ஆகியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here