வியட்நாமில் உயிரிழந்த யாழ். நபரின் உடல் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது..!!!


அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்று(17) விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் விரைவில் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது,

இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவர்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்தனர். அவர்களில் யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்தநிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நிலவியநிலையில் இன்று அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here