காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரத கடவையில் உள்ள தானியங்கி பாதுகாப்பு கேட் இயங்காதது குறித்து வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news