அஜித் நடிக்க உள்ள ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்தார்.
மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமி, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்தநிலையில் ஏகே62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி உள்ளதாகவும், அவருக்கு பதிலாக இயக்குனர் அட்லீ அல்லது விஷ்ணுவர்தன் அஜித்தின் ஏகே62 படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித் சில மாற்றங்களை செய்ய கூறியுள்ளார். திரைக்கதையில் விக்னேஷ் சிவன் மாற்றம் செய்த பிறகும் அஜித்திற்கு கதையில் திருப்தி இல்லையாம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்திற்கு டஃப் கொடுக்க அஜித் நினைக்கிறாராம். இதனால் இயக்குநர்கள் அட்லீ மற்றும் விஷ்ணுவர்தனிடம் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் அஜித், சென்னை திரும்பியதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஏகே 62 படப்பிடிப்பு துவங்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:
cinema news