கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கேமா அறக்கட்டளையினால் கற்றல் உபகரணம்..!!!


புதுவருட தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஹற்றன், கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தோட்ட அறநெறிப்பாடசாலையில் கல்விகற்கும் 52 மாணவர்களுக்கு காங்கேசன்றை ,கேமா அறக்கட்டளையினால் நேற்றையதினம் (01) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பில் சமூக நல்வழிமன்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் கள இணைப்பாளர் பெரியசாமி அன்பரசி , குறித்த பிரதேசத்தில் கல்விகற்கும் 52 மாணவர்களது தேவை தொடர்பில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசலா சிவா அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் திரு திருமதி கௌசலா சிவா அவர்களினாலேயே மாணவர்களிக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்த சேவை நடவடிக்கையில் கேமா அறக்கட்டளையோடு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியமும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post


Put your ad code here