நெதர்லாந்து தூதுவர் யாழ் SK விவசாய பண்ணைக்கு விஜயம்..!!!


யாழ் மாவட்டம் ஆழியவளை உலந்தைக்காடு SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech இன்றையதினம் (23) விஜயம் மேற்கொண்டார்.

SK விவசாயப்பண்ணையானது நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவரினால் நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விஜயத்தின் போது நெதர்லாந்து தூதுவர் குறித்த விவசாயப்பண்ணையினை நடாத்தும் அதே நாட்டைச்சேர்ந்த பெண்மணியின் குறித்த விவசாய ஈடுபாட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவரது பண்ணையினை சுற்றிப்பார்த்து கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தென்னை மற்றும் ஏனைய பயிர்செய்கை செயற்பாடுகள் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.

மேலும் யுத்தத்தின் பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்களுடைய இன்றைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதோடு மக்களின் வாழ்வாதார நிலை குறித்தும் அறிந்துகொண்டார். அதுமட்டுமன்றி குறித்த விவசாயப்பண்ணையினால் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தமுடியுமென்றும் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.




Previous Post Next Post


Put your ad code here