’விஜய் 67’ படத்தின் பெயர் அறிவிப்பு..!!!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

மேலும், படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு 'லியோ’ எனப் பெயரிட்ட புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால், இந்திய அளவில் ’விஜய் 67’ டிரண்டிங்கில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.

மேலும் இப்படம் 2023, அக்.19 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here