யாழ்ப்பாணம் இணுவில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சம் (05.02.2023) வீதியுலா வந்தது.
வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் மஞ்சத்தில் பவனி வந்தார்.
இதனைக் காண்பதற்காக அடியவர்கள் பலர் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இணுவையம்பதி வந்து சேர்ந்தார்கள்.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், கலை நேர்த்தியுடன் கட்டப்பட்ட உலகப்பெருமஞ்சம், இலங்கையின் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்திருப்பது இந்துக்களுக்கு சிறப்பாகும்.
வருடத்தில் தைப்பூசம் மற்றும் வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் திருவிழா ஆகிய இரண்டு தினங்களில் உலகப்பெருமஞ்சம் வீதியுலா வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்