மருதங்கேணியில் தோன்றிய சிவலிங்கம்..!!!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி , முடங்குதீவு பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் சிவலிங்கம் ஒன்று நேற்றையதினம் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறித்த பகுதி ஊடாக பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்திற்கு பூ வைத்து , கற்பூரம் கொளுத்தி , தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.







Previous Post Next Post


Put your ad code here