
மருதங்கேணி பகுதியில் தாய் பால் கொடுக்காததால், இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
மருதங்கேணி பகுதியில் அண்மையில் 2 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்படாதமையாலையே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் உள நோய்க்கு உள்ளானவர். தகப்பன் மதுவுக்கு அடிமையானவராக காணப்பட்டுள்ளார். இவ்வாறான சூழலில் குழந்தை பராமரிப்பு இன்றி உயிரிழந்துள்ளது என தெரிவித்தார்.