இன்றைய ராசிபலன் - 19.05.2023..!!!


மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் நிதானத்தை கையாளுவது நல்லது. முன் கோவம் வீண் பிரச்சனையை உண்டு பண்ணும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய அனுபவம் பெறுவீர்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் முற்போக்கு சிந்தனையுடன் கையாளுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் கை கூடி வரும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவை அறிந்து உதவி செய்யுங்கள்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது ஈடேறுவதில் காலதாமதம் ஆகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொறுமையை இழக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மையோடு இருப்பது நல்லது.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுயமரியாதையை இழக்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அடுத்தவர்களின் பணியையும் கூடுதலாக செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ள கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே வாக்குவாதங்களை வளர்க்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் பகை வளரும் எனவே விட்டுக் கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகள் ஆதரவு பெறுவீர்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்கள் சுதந்திரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் அவதிப்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களை சுற்றியுள்ளவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிமை மறைய கூடிய வாய்ப்பு உண்டு. மனதிற்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தடைகளை தாண்டி நீங்கள் வெற்றி நடை போடக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை மேலும் மெருகேற்றுவீர்கள்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகளில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூலமான கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களே எதிரி ஆக வாய்ப்பு உண்டு.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் வரக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவரையும் எடை போடாதீர்கள்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்தநிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சாமர்த்தியமாக முடிவெடுப்பது நல்லது.
Previous Post Next Post


Put your ad code here