2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடைத்தாள் மீள் திருத்த பணிகளை தொடர்ந்து, மேலும் 146 மாணவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மீள் திருத்தம் செய்ய மொத்தம் 25,157 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 20,334 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் 4,823 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் பரீட்சை எழுதியவர்கள் ஆவர்.
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் திங்கட்கிழமை (29) வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news
