இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனையான முதலை பணிஸ்..!!!


அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ, படிகார மடுவ பிரதேசத்தில் முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பணிஸ் ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள பெண்கள் சங்கமொன்றுக்கு நிதித்திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கண்காட்சி, ஒன்றில் குறித்த முதலை பணிஸ் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அங்கு ஏலம் விடப்பட்ட முதலை பணிஸ், 2 அடி 2 அங்குலம் நீளம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலுள்ள இளைஞர்கள் குழுவொன்று அந்த பணிஸை வாங்கியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here