இன்றைய ராசிபலன் - 26.05.2023..!!!


மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாசிட்டிவான எனர்ஜி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அனாவசிய வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் நேரத்தை விரயம் செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் ஆர்வம் குறைந்து காணப்படும்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் சலசலப்புகள் அடங்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் தடைபடலாம்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் உறுதியான மனப்பான்மை இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அடுத்தவர்களுடைய விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்கள் பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்படலாம் எனினும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான காரியமும் சவாலாக அமையும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கூடுதல் அக்கறை தேவை. உறவுகளுக்கு இடையே நம்பகத்தன்மை குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நண்பர்களை இனம் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் திருப்தி ஏற்படாமல் தவிர்க்க கூடிய வாய்ப்பு உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிறிய விஷயங்களுக்கு கூட பதட்டம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயபுத்தியுடன் செயல்படுவது நல்லது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முழு மகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் புறக்கணிக்கப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சவால் நிறைந்த விஷயங்களை எளிதாக கையாண்டு வெற்றி காணக்கூடிய யோகம் உண்டு.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் இடையூரு இல்லாமல் இருக்க நேர்மறையான சிந்தனைகள் தேவை. கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் திறக்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. மூன்றாம் மனிதர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சுய தொழிலில் திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முடிந்து போன உறவுகள் தேடி வரும் வாய்ப்பு உண்டு.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய புதிய சிந்தனைகளால் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்களில் இருந்து கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல சிலரை இனம் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்காதீர்கள், ஆபத்தில் முடியும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. வேலை பளு அதிகரித்து காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here