பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் மீட்பு..!!!


களுத்துறை நகரில் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாணவியின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நேற்று மதியம் மற்றுமொரு இளம் ஜோடி மற்றும் இளைஞர் ஒருவருடன் தற்காலிக விடுதிக்கு வந்து மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

மாணவியுடன் வந்த மற்றைய ஜோடி, சிறுமியின் சடலம் கிடைப்பதற்கு சற்று முன்னர் விடுதியை விட்டு வெளியேறியதுடன், அவருடன் வந்த இளைஞனும் விடுதி அறையை விட்டு வௌியேறியிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடலின் பல பாகங்களில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன், நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.
Previous Post Next Post


Put your ad code here