தூக்கமின்மையால் ஏற்படும் அபாயம்..!!!


உணவு, உடை, இடம் இந்த மூன்றுக்கும் இணையாக அடுத்து ஓர் மனிதனுக்கு மிகவும் அவசியமானது நல்ல உறக்கம் ஆகும். நன்கு உழைத்தால் நல்ல உறக்கம் வரும் என்பார்கள். ஆனால், இன்று கணினி முன் அமர்ந்து நாள் முழுக்கு உழைத்தால் கடும் நோய்கள் தான் வருகின்றன.

எனவே, நாம் நமது வாழ்வியல் முறை மற்றும் வேலை முறையை சரியாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் உடல்நிலை குறைபாடுகள் ஏற்படும்.

தூக்கமின்மை காரணமாக நமது உடலில் நிறைய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது. முக்கியமாக உடல் எடை, மன அழுத்தம், இதய பிரச்சனைகள் போன்றவை ஆகும்.

துரித உணவு மட்டுமின்றி, சரியான அளவு தூங்காமல் இருப்பது நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கும். இதனால் மயக்கம், உடல் சோர்வு போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஓரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவது எலும்புகளை வலுவாக பாதிக்கும். முக்கியமாக எலும்புகளில் இருக்கும் மினரல்ஸ் அளவு குறைந்துவிடும். இதனால் எலும்பு வலிகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

சமீபத்திய ஆய்வில் போதிய தூக்கமின்மை மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை உடலில் நச்சுக்களை எதிர்த்து போராடும் திறனை குறைத்துவிடுகிறது. மேலும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

போதிய தூக்கமின்மை மூளையை சோர்வடைய வைக்கின்றது. நமது மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல தூக்கம் தேவை. தூக்கமின்மை காரணத்தால் நினைவாற்றல் குறைபாடும் ஏற்படும்.

தூக்கமின்மையால் ஏற்படும் மிகப்பெரிய குறைபாடு மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகும். இது மெல்ல மெல்ல, மற்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
Previous Post Next Post


Put your ad code here