அஜித் பிறந்தநாளுக்கு லைகா கொடுத்த மாஸ் அப்டேட்..!!!


நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அட்டகாசமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ரசிகர் சாம்ராஜ்யத்தையும் நடிகர் அஜித் உருவாக்கி வைத்திருக்கிறார்.

1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் அறிமுகமானர் அஜித். இருப்பினும், 1990 ஆம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் ஒரு பாடலில் பள்ளி மாணவராக நடித்திருப்பார்.

அமராவதி படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பின் மூலமாக அசத்திய அஜித், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தோடு இதுவரை 61 படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, அஜித் நடிக்கும் 62வது படத்தின் தலைப்பை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளான இன்று (மே 1) நள்ளிரவு 12 மணிக்குப் படத்தின் தலைப்பை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது லைகா நிறுவனம்.

தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Previous Post Next Post


Put your ad code here