வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்..!!!


புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் காலை 9.20 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(22) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15ம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டநிலையில் மே 17 ம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
Previous Post Next Post


Put your ad code here