யாழில் வயலுக்குள் பாய்ந்த பேருந்து; அதிஷ்டவசமாக தப்பிய ஊழியர்கள்..!!!


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.

இன்று மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது.

அதிஷ்டவசமாக இ.போ.ச.பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பேருந்தில் ஒரு சில இ.போ.ச ஊழியர்கள் மாத்திரம் பயணித்திருந்தனர்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை தூக்கி வீதிக்கு கொண்டு வந்தனர்.
குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் பேருந்து ஏறும் படி பலத்த சேதமானது.
Previous Post Next Post


Put your ad code here