புத்தகதினத்தை முன்னிட்டு நடேஷ்வர மாணவர்களுக்கு வாசிப்பு போட்டி..!!!


 அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1 இணையத்தளம் ஆகியவை இணைந்து, காங்கேசன்துறை நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்காக வாசிப்பு போட்டியினை இன்றைய தினம் புதன்கிழமை பாடசாலை வகுப்பறையில் நடாத்தியிருந்தது.

மீள்குடியேற்ற பகுதியான காங்கேசன்துறை பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலையானது குறைந்தளவு மாணவர்களை கொண்டுள்ளதோடு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களே அதிகளவில கல்விகற்கின்றனர்.

மேலும் மாணவர்களுக்கு கல்விமீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கான வாசிப்பு திறன் விருத்தியை ஊக்குவிக்கும் வகையில் இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஆண்டு 5 மாணவர்களுக்கு இன்றைய தினம் இப்போட்டி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post


Put your ad code here