முல்லைத்தீவில் தீயில் எரிந்து வீடு மற்றும் உடமைகள் சேதம்..!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் மே19ம் திகதியன்று இரவு நேரத்தில் திடீரென குப்பி விளக்கு தீப்பற்றியதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் தற்காலிக வீட்டின் ஒரு பகுதியும் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள், 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பன தீயில் எரிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தமது பகுதி விசுவமடு மேற்குகிராம அலுவலருக்கு தெரிவித்து இருந்த போதிலும் கிராம சேவையாளர் வந்து பார்வையிடவில்லை எனவும் தமது வீடு எரிந்தது தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்துள்ள போதிலும் புதுக்குடியிருப்பு போலிசாரும் இச்சம்பவம் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறியிடும் வீட்டார், தற்பொழுது அயல் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர்
Previous Post Next Post


Put your ad code here