அமெரிக்க டொலருக்கு பதில் இந்திய ரூபா – ஒப்பந்தம் கைச்சாத்து..!!!


இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, நேற்று (21) இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக நியமிப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையின் நாணயப் பரிமாற்ற முறைமையில் இந்திய ரூபா ஏற்கனவே நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

எனினும், அந்தப் பணத்தைப் பயன்படுத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் முடிவு செய்யப்படுகிறது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here